TNPSC Thervupettagam

பத்தல் கிராமத்தில் ஆர்கனோபாஸ்பேட் நச்சு

February 22 , 2025 10 hrs 0 min 22 0
  • ஜம்மு-காஷ்மீரின் பத்தல் என்ற கிராமத்தில் பதட்ட நிலையை ஏற்படுத்திய 17 பேரின் உயிரிழப்பிற்கு ஆர்கனோபாஸ்பேட் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
  • இந்த இரசாயனங்கள் ஆனது தீங்குயிர்க் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆர்கனோபாஸ்பேட்டுகள் என்பது மிகப் பொதுவாக பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கவும், பூச்சிகளால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தச் செய்யவும் என்று பயன்படுத்தப் படுகின்றன.
  • அவை இந்த நச்சினால் மிகவும் கடுமையாகத் தாக்கப்படும் உயிரினங்களில் நரம்பு சமிக்ஞைகளின் பரவலைச் சீர்குலைப்பதன் மூலம் கடும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
  • ஆர்கனோபாஸ்பேட்டுகள் என்பது செயற்கை இரசாயனங்கள் ஆகும்.
  • ஆரம்பத்தில் நரம்புத் தூண்டுதல் முகவர் காரணியாக இராணுவப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை பின்னர் வேளாண் நோக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்