லூசியானாவின் நியூ ஒர்லியன்ஸில் உள்ள அமெரிக்கப் பேச்சு வழக்கு சமூகத்தைச் சேர்ந்த மொழியியலாளர்கள் “அவர்கள்” (THEY) என்ற சொல்லை “பத்தாண்டுகளின் சொல்லாக” தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆண் அல்லது பெண் பாலினத்துடன் அடையாளம் காண முடியாதவர்களைக் குறிப்பதற்காக “அவர்கள்” என்ற ஒற்றை உச்சரிப்புச் சொல்லானது மூன்றாம் நபர் பன்மைப் பெயராக பயன்படுத்தப் படுகின்றது.
“அவர்கள்” என்ற சொல்லானது 2015 ஆம் ஆண்டில் “ஆண்டின் சொல்லாகவும்” அறிவிக்கப் பட்டது.
அமெரிக்கப் பேச்சு வழக்குச் சமூகமானது தற்பொழுது வரை இரண்டு "பத்தாண்டுகளின் சொல்லை" மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது. 1990களின் பத்தாண்டிற்கான சொல்லாக "வலை" என்பதையும் 2000களின் பத்தாண்டிற்கான சொல்லாக "கூகிள்" என்பதையும் இந்த அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.