இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாநில தேர்வு வாரியத் தேர்வுகளில் 91.55% மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆனது 97.3% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 97% தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் 96.3% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் ஆனது கடந்த ஆண்டு பதிவான 91.39% தேர்ச்சி விகிதத்தினை சிறிய வித்தியாசத்தில் விஞ்சியுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு 9,14,320 மாணவர்களாக பதிவான தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 8,94,260 மாணவர்களாக குறைந்து உள்ளது.
94.53% தேர்ச்சியுடன் மாணவிகள் மாணவர்களை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற நிலையில் மாணவர்கள் தேர்ச்சி 88.58% ஆக உள்ளது.
இது தேர்ச்சி சதவீதத்தில் 5.85% வித்தியாசத்தைக் காட்டுகிறது.
மாநிலத்தில் உள்ள 12,625 பள்ளிகளில் 4,105 பள்ளிகளும், 1,364 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சியினைப் பதிவு செய்துள்ளன.
கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியலில் 5,104 மாணவர்களும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழில் எட்டு பேர் மட்டுமே 100 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் 415 பேர் ஆங்கில மொழியில் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழக மாநிலத்தில் தேர்வெழுதிய மொத்தம் 260 சிறைக் கைதிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.