TNPSC Thervupettagam

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

May 13 , 2024 195 days 219 0
  • இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாநில தேர்வு வாரியத் தேர்வுகளில் 91.55% மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • அரியலூர் மாவட்டம் ஆனது 97.3% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 97% தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் 96.3% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் ஆனது கடந்த ஆண்டு பதிவான 91.39% தேர்ச்சி விகிதத்தினை சிறிய வித்தியாசத்தில் விஞ்சியுள்ளது.
  • எனினும், கடந்த ஆண்டு 9,14,320 மாணவர்களாக பதிவான தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 8,94,260 மாணவர்களாக குறைந்து உள்ளது.
  • 94.53% தேர்ச்சியுடன் மாணவிகள் மாணவர்களை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற நிலையில் மாணவர்கள் தேர்ச்சி 88.58% ஆக உள்ளது.
  • இது தேர்ச்சி சதவீதத்தில் 5.85% வித்தியாசத்தைக் காட்டுகிறது.
  • மாநிலத்தில் உள்ள 12,625 பள்ளிகளில் 4,105 பள்ளிகளும், 1,364 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சியினைப் பதிவு செய்துள்ளன.
  • கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியலில் 5,104 மாணவர்களும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
  • தமிழில் எட்டு பேர் மட்டுமே 100 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் 415 பேர் ஆங்கில மொழியில் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
  • தமிழக மாநிலத்தில் தேர்வெழுதிய மொத்தம் 260 சிறைக் கைதிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்