10-வது தெற்காசிய பொருளாதார மாநாடு (SAES – South Asia Economic Summit) நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடத்தப்பட்டது.
3 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் கருத்துரு “தெற்காசியாவில் நீடித்த மற்றும் உள்ளடக்க வளர்ச்சிக்காக பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்”.
பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான காரணிகளை முன்னெடுக்கவும், தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் வளர்ச்சி சவால்கள் மற்றும் பிரச்சனைகளை ஆராயவும், விவாதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட பிராந்திய மேடையே இந்த மாநாடாகும்.