வருடாந்திர உலகளவிலான பத்திரிக்கையாளர்கள் மீதான கொடிய வன்முறைகள் மற்றும் தவறாக நடத்துதல் அறிக்கையை எல்லைகள் கடந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Reporters without Borders-RSF/ Reporters Sans Frontières) வெளியிட்டுள்ளது
இந்த அறிக்கையின்படி 2018-ல் நடத்தப்பட்ட அளவிற்கு பத்திரிக்கையாளர்கள் மீது இதுவரையில் வன்முறை மற்றும் தவறான முறையில் நடத்துதல் ஆகிய முறைகளில் எப்போதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டதில்லை.
இது 8% அளவில் உயர்ந்து 80% ஐ எட்டியுள்ளது. மேலும் 2017ல் 55 ஆக இருந்த தொழில்நுட்ப பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 சதவீத அளவில் அதிகரித்து 2018-ல் 63 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது முந்தைய 3 வருடங்களில் குறைந்து இருந்தது.
இது கடந்த 23 வருட வரலாற்றில் தனது வருடாந்திர பட்டியலில் முதன்முதலாக அமெரிக்காவை மோசமான குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
உலகின் அதிக அளவில் (60 பேர்) பத்திரிக்கையாளர்களை சிறையிலடைக்கும் நாடாக சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த பட்டியலில் பத்திரிக்கையாளர்களை மோசமாக நடத்தும் 5-வது நாடாக இந்தியா உள்ளது.
இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டு வருகிறது.
இவ்வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் RSF ஆனது உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டது. அதில் இந்தியா 138வது இடத்தில் வைக்கப்பட்டது.