சமீபத்தில் ஈரான் சீர்வேக ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு பத்தே (வெற்றியாளர்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் சீர்வேக ஏவுகணைகளுடன் நீர்மூழ்கிக் குண்டுகள் மற்றும் நீர்மூழ்கி வெடிபொருள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நீர்மூழ்கிக் கப்பலானது ஈரானின் முதலாவது மிதமான கனரக வகையைச் சார்ந்ததாகும்.
ஈரான் தற்பொழுது வைத்துள்ள மிதமான எடை கொண்ட காதிர் வகை மற்றும் கனரக கிலோ வகை ஆகியவற்றிற்கிடையேயான இடைவெளியை இது பூர்த்தி செய்யும்.
செங்குத்தான செலுத்து அமைப்பின் வகையில் கடந்த 40 ஆண்டுகளில் ஈரான் இராணுவம் மேற்கொண்டுள்ள முக்கியமான திட்டங்களில் இந்தத் திட்டம் மிக இன்றியமையாத ஒன்றாகும்.