குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 30 பெண்கள் மற்றும் வெளிநாட்டினர் /வெளிநாடு வாழ் இந்தியர்/இந்திய வம்சாவளி நபர்/இந்திய வெளிநாட்டுக் குடியுரிமை பிரிவில் இருந்து எட்டு நபர்கள் மற்றும் மரணத்திற்குப் பின் இந்த விருது பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஒன்பது நபர்கள் உட்பட 132 பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார்.
இரண்டு முறை பீகார் முதல்வராக இருந்த கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது (மறைவிற்கு பின்) வழங்கப்பட்டது.
மகத்தான மற்றும் சிறப்பான சேவைக்காக 'பத்ம விபூஷன்' விருது வழங்கப்படுகிறது.
உயர் மதிப்பு மிக்க சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷன்' விருதும், ஒரு துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்காக 'பத்ம ஸ்ரீ' விருதும் வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப் படுகின்றன.