TNPSC Thervupettagam
January 27 , 2025 27 days 163 0
  • நாட்டின் மிக உயரியக் குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆனது, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
  • கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, ஆட்சிப் பணி போன்ற பல்வேறு துறைகள்/ செயல்பாட்டுத் துறைகளில் வழங்கப்படுகின்றன.
  • மகத்தான மற்றும் சிறப்பான சேவைக்காக பத்ம விபூஷண் வழங்கப் படுகிறது.
  • சிறப்பான பொதுச் சேவைக்காக பத்ம பூஷண் விருதும், எந்தவொரு துறையிலுமான சிறப்பான சேவைக்காக ‘பத்ம ஸ்ரீ’ விருதும் வழங்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
  • 2025 ஆம் ஆண்டில், 1 இரட்டை விருது (இரட்டை விருதில், அந்த விருது ஒன்றாகக் கணக்கிடப் படும்) உட்பட 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.
  • விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் ஆவர் என்பதோடு 10 பேர் வெளிநாட்டினர்/ வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) / இந்திய வம்சாவளியினர் (PIO) / வெளிநாட்டுக் குடியுரிமை கொண்ட இந்தியர்கள் (OCI) என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்ற நிலையில் 13 பேருக்கு மறைவுக்குப் பின்னதாக இந்த வழங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்