TNPSC Thervupettagam

பந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் சதுப்புநில மான்

May 15 , 2023 432 days 336 0
  • பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் மகதி மண்டலத்தில் கட்டமைக்கப்பட்டத் தனிப் பிரிவில் 19 சதுப்புநில மான்கள்  விடப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் பந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
  • பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் மகதி மண்டலத்தில் சதுப்பு நில மானுக்காக என்று  கட்டமைக்கப் பட்ட தனிப்பிரிவிற்கு 'பாரசிங்க இல்லம்' (சதுப்பு நில மான் இல்லம்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • சுமார் மூன்று வருடங்கள் அவை தனிப்பிரிவில் வைக்கப்பட்டு பின்னர் காட்டுக்குள் விடப் படும்.
  • இந்தக் காப்பகமானது மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இவை கன்ஹா தேசியப் பூங்காவில் இருந்து கொண்டு வரப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்