TNPSC Thervupettagam

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50 ஆண்டுகள் நிறைவு

April 8 , 2023 602 days 283 0
  • கர்நாடாகாவில் உள்ள பந்திப்பூர் சரணாலயம், புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழான புலிகள் காப்பகமாக இடம் பெற்றதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், பெரும் பூனை இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கட்டுப் படுத்தச் செய்வதற்காக வேண்டி முதன்மையான புலிகள் வளங்காப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • புலிகள் வளங்காப்புத் திட்டம் தொடங்கப் பட்டபோது பந்திப்பூரில் 12 புலிகள் மட்டுமே இருந்தன.
  • இன்று, இந்தப் பூங்காவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 173 ஆகும்.
  • இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் ஒன்பது காப்பகங்களில் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் ஒன்றாகும்.
  • பந்திப்பூர் புலிகள் காப்பகமானது, நாட்டின் முதல் உயிர்க்கோளக் காப்பகமான நீலகிரி உயிர்க் கோளக் காப்பகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்