உத்திரப் பிரதேச அரசானது புதிதாக வரவுள்ள பந்தேல்கண்ட் விரைவு வழிப் பாதையை ‘அடல் பாத்‘ எனப் பெயரிட முடிவு செய்துள்ளது.
இது 289 கி.மீ நீளமும், 4 பாதைகளையும் உடைய அணுகல் கட்டுப்பாட்டு பாதை என முன்மொழியப்பட்டுள்ளது. இச்சாலையானது ஜான்சியில் தொடங்கி ஆக்ரா-லக்னோ விரைவு வழிப் பாதையில் இணைகிறது.
இது உத்திரப் பிரதேச விரைவுப் பாதை தொழில்துறை அபிவிருத்தி ஆணையத்தால் (Uttar Pradesh Expressway Industrial Development Authority - UPEIA) முன்மொழியப்பட்டுள்ளது.