கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியாவின் கேமருன் பேன்கிராஃப்ட், பந்தின் தன்மையை மாற்றுவதற்காக மணல் காகிதத்தைப் (Sand paper) பயன்படுத்திய காட்சியால் பிடிபட்டார்.
ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் மூவரும் விளையாட்டிற்கு கேட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்திரேலியாவின் எல்லா விதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் எல்லா சர்வதேச போட்டிகளிலும் 12 மாத கால அளவிற்கும், பேன்கிராஃப்ட் 9 மாத கால அளவிற்கும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் தந்து பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பந்தை சேதப்படுத்துதல்
பந்து வீச்சாளர்களுக்கு உதவிடும் வகையில், பந்தின் காற்றியக்க திசையில் செல்லும் தன்மையில் குறுக்கீடு செய்வதற்காக கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் தன்மையை மாற்றியமைக்கும் செயலே பந்தை சேதப்படுத்துதல் ஆகும்.
இந்த செயலானது பந்தின் புறப்பரப்பை மணல்காகிதத்தைக் (அல்லது வேறு ஏதாவதொரு பொருள் கொண்டு) கொண்டு தேய்மானம் அடையச் செய்வது அல்லது, பந்தின் புறப்பரப்பை நகத்தால் உராய்ப்பது அல்லது தரையில் தேய்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.
மெல்பர்ன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் சட்டத்தின், ஷரத்து 41, துணைப்பிரிவு 3-ன் படி கிரிக்கெட் வீரர்கள் வேறு எந்தவொரு புறப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பந்தின் பரப்பை மெருகேற்ற அனுமதிக்கப்படுவர்.