TNPSC Thervupettagam

பனி உருகுதல் காரணமாக கிரீன்லாந்து கடல்பகுதியில் குறைந்த உப்புத்தன்மை

October 16 , 2017 2597 days 1169 0
  • வடகிழக்கு கிரீன்லாந்தின் பெருங்கடல் தகவல் முதல் முறையாக கிரீன்லாந்து பனிக்கட்டி உருகுதலின் நீண்டநாள் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
  • கிரீன்லாந்து பனிக்கட்டியின் அதிகப்படியான உருகுதல் கடல்நீர் குறைந்த உப்புத்தன்மையாக மாறுவதற்கு வழிவகுத்துள்ளது.
  • இந்த குறைந்த உப்புத்தன்மையுடைய கடல்நீர் கடல்வாழ் உயிரினங்களையும், ஐரோப்பாவை வெப்பமாக வைத்திருக்க உதவும் கடல் நீரோட்டங்களையும் பாதிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கிரீன்லாந்து சுற்றுச்சூழல் கண்காணிப்புத் திட்டம் பனிக்கட்டியிலிருந்து உருவாகும் நன்னீர் அப்பனிக் கட்டியை  சுற்றியுள்ள கடல்பகுதியின் மேற்தளத்தில் திரண்டு கிரின்லாந்தின் நுழைகழிப் பகுதிகளில் (Fjords) பாய்ந்தோடுவதாக எடுத்துரைக்கிறது.
  • 1983 முதல் 2003 வரையிலான கால அளவைக் காட்டிலும் கிரீன்லாந்து பனிக்கட்டி உருகுதலின் தற்போதைய நிலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • நுழைகழி (Fjords) என்பது நீண்ட, குறுகலான, ஆழ்ந்த நுழைவாயில் பகுதியாகும். இது கடலில் பனிமூடிய பள்ளத்தாக்கு மூழ்கியதன் காரணமாக ஏற்பட்ட உயரமான பாறைகளுக்கு நடுவே காணப்படும் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்