TNPSC Thervupettagam

பனி உருகுவதைக் குறைக்கும் வைரஸ்கள்

June 11 , 2024 20 days 168 0
  • கிரீன்லாந்தின் பனிப்படலத்தில் மர்மமான மிகப்பெரிய சில வைரஸ்களை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த வைரஸ்கள் 1981 ஆம் ஆண்டில் பெருங்கடலில் முதல் முறையாக கண்டறியப் பட்டன.
  • இவை பொதுவாக பெருங்கடலில் உள்ள பாசிகளைத் தாக்கக் கூடியது.
  • ஆனால் இத்தகையப் பனி வாழ்விடங்களில் மிகப்பெரிய வைரஸ்கள் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த மிகப்பெரிய வைரஸ்கள் ஒருவித இரகசிய ஆயுதமாகச் செயல்படும் என்றும், பனி உருகுவதைக் குறைக்க உதவுவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
  • வழக்கமான வைரஸ்கள் 20-200 நானோமீட்டர் அளவைக் கொண்டிருக்கும், அதே சமயம் ஒரு வழக்கமான பாக்டீரியா என்பது 2-3 மைக்ரோமீட்டர்கள் வரையிலான அளவில் தான் இருக்கும்.
  • வேறு விதமாக கூறுவதென்றால், ஒரு சாதாரண வைரஸ் என்பது பாக்டீரியாவை விட 1,000 மடங்கு சிறியதாகும்.
  • ஆனால் இந்த மிகப்பெரிய வைரஸ்கள் சுமார் 2.5 மைக்ரோமீட்டர் அளவில் வளரும் என்ற நிலையில் இது பெரும்பாலான பாக்டீரியாக்களை விட பெரியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்