TNPSC Thervupettagam

பனி மண்டலத்தின் நிலை குறித்த அறிக்கை 2023

November 25 , 2023 237 days 212 0
  • சர்வதேச பனி மண்டல (தாழ் வெப்ப மண்டலம்) பருவநிலை முன்னெடுப்பு அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் வடக்கு ஆண்டிஸ், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவின் பல பனிப்பாறைகள் வேகமாக மறைந்து வருகின்றன.
  • சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் எஞ்சியுள்ள 10 சதவீத பனிப்பாறைகள் இரண்டே ஆண்டுகளில் குறைந்துள்ளன.
  • அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனியானது, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத குறைந்த கோடை மற்றும் குளிர்கால சாதனை அளவை எட்டியது.
  • ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் நீரின் வெப்பநிலையானது இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • வளிமண்டலக் கார்பன் டை ஆக்சைடின் செறிவு ஆனது, 2023 ஆம் ஆண்டில் தொழில் துறை காலத்திற்கு முந்தைய அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
  • ஒரு மில்லியனுக்கு 424 பாகங்கள் என்ற அளவிலான CO2 செறிவு ஆனது, கடந்த மூன்று மில்லியன் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
  • பூமியின் பனிப்பரவல்களில், 1992 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 7,560 பில்லியன் டன் பனி குறைந்துள்ளது.
  • கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 12-20 மீட்டர் கடல் மட்ட உயர்வுக்கு பங்களிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்