TNPSC Thervupettagam

பனி மண்டலத்தின் நிலை குறித்த அறிக்கை 2024 – ICCI

November 17 , 2024 5 days 70 0
  • இந்த அறிக்கையானது சர்வதேசப் பனி மண்டல பருவநிலை முன்னெடுப்பு (ICCI) என்ற அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • கிரீன்லாந்து பகுதியின் பனிப்பரவல் ஆனது, தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30 மில்லியன் டன் பனியை இழந்து வருகிறது.
  • மேலும், வடக்கு கிரீன்லாந்தில் உள்ள பனிப்படிவு அடுக்குகள் 1978 ஆம் ஆண்டு முதல் அதன் மொத்த அளவில் 35% படிவுகளை இழந்துள்ளன.
  • உலக கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது கடந்த 30 ஆண்டுகளில் சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • தற்போதையப் போக்குகளின்படி, 2050 ஆம் ஆண்டில் இது ஆண்டிற்கு 6.5 மில்லி மீட்டர் என்ற வீதத்தில் அதிகரிக்கும்.
  • வெனிசுலா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய இரு பகுதிகள் நவீன காலத்தில் அவற்றின் இறுதி பனிப்பாறைகளை இழந்தன.
  • பனி மண்டலம் (தாழ் வெப்ப மண்டலம்) என்பது பூமியில் உள்ள பனி அல்லது பனிப் பகுதிகளைக் குறிக்கிறது என்ற நிலையில் இந்த பகுதியானது ஆண்டின் ஒரு பகுதியில் 0 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் காணப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்