பனிச் சிறுத்தையின் 70 சதவிகித்திற்கும் மேலான வாழ்விடங்கள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதாக உலக வனவிலங்கு நிதியமானது சமீபத்தில் தெரிவித்துள்ளது.
“பனிச் சிறுத்தையின் வாழ்விட வரம்புகளைப் பற்றிய புரிதல் நிலையின் தெளிவான பரவலான மறுசீராய்வு” (A spatially explicit review of the state of knowledge in the snow leopard range) எனும் அறிக்கையின்படி இது கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான பனிச் சிறுத்தை தொடர்பான ஆராய்ச்சிகளை நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அதனையடுத்த நிலையில் மங்கோலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
உலகில் 4000 பனிச் சிறுத்தைகள் மட்டுமே எஞ்சியிருக்கக்கூடும்.
அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதாலும் சமுதாயத்துடனான மோதல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களாலும் தொடர்ந்து அவை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசானது பனிச் சிறுத்தை (Project Snow Leopard) திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.