TNPSC Thervupettagam

பனிச்சிறுத்தை - தேசிய சின்னம்

January 10 , 2024 191 days 518 0
  • கிர்கிஸ்தான் நாடானது, பனிச்சிறுத்தையை தனது தேசிய சின்னமாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • பாந்தெரா அன்சியா / பனிச்சிறுத்தை ஆனது, கிர்கிஸ் மக்களின் புகழ்பெற்ற நாயகனான மனாஸுடன் தொடர்புடைய ஒரு குலமரபு விலங்காக பண்டைய கிர்கிஸ் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.
  • கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் 2013 ஆம் ஆண்டு உலகளாவிய பனிச் சிறுத்தை மன்றத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்வின் போது, பனிச்சிறுத்தைப் பாதுகாப்பு குறித்த பிஷ்கெக் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் (GSLEP) ஆனது, பனிச்சிறுத்தைகள் காணப்படும் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்