TNPSC Thervupettagam

பனிச்சிறுத்தைகள் வளங்காப்பு இனப்பெருக்கத் திட்டம்

January 16 , 2024 313 days 366 0
  • டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் தற்போது 7 ஆண் மற்றும் 7 பெண் பனிச் சிறுத்தைகளுடன் மொத்தம் 14 எண்ணிக்கையுடன் உலகிலேயே அதிக அளவிலான எண்ணிக்கையிலான பனிச்சிறுத்தைகள் காத்து வைக்கப்பட்டுள்ளன.
  • அவற்றுள் மூன்று தாய்ச் சிறுத்தைகளால் ஆறு குட்டிகள் ஈனப்பட்டன.
  • பொதுவாக டார்ஜிலிங் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகின்ற பத்மஜா நாயுடு இமாலய விலங்கியல் பூங்காவில் (PNHZP) இனப்பெருக்கத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இது அதிகபட்சப் பதிவாகும்.
  • பனிச்சிறுத்தைகள் ஆனது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் "எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனங்கள்" அல்லது IUCN அமைப்பின் "அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் செந்நிற பட்டியல்" பிரிவில் உள்ளன.
  • உலகளவில் இதன் எண்ணிக்கை 4,000 முதல் 7,500 வரை காணப் படுகிறது.
  • இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பனிச்சிறுத்தைகளுக்கான வளங்காப்பு இனப் பெருக்கத் திட்டமானது 1985 ஆம் ஆண்டில் டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் தொடங்கப் பட்டது.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டில், தற்போது டாப்கேதாராவில் ஐந்து ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள வளங்காப்பு இனப்பெருக்க மையத்தில் பனிச் சிறுத்தையின் முதல் பிறப்பு பதிவானது.
  • அன்று முதல் அந்த உயிரியல் பூங்காவில் 77 பனிச்சிறுத்தைகள் பிறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்