நாசா மற்றும் ஜாக்ஸா அமைப்புகளது கண்டுபிடிப்புகளின் படி, குளிர்காலப் பனிப் போர்வையானது இப்போது 110 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது 1982 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த 126 நாட்களுடன் ஒப்பிடும் பொழுது, தற்பொழுது குறைந்த நாட்கள் மட்டுமே நிகழ இருக்கின்றது.
2071 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்படும் குளிர்காலப் பனிப் போர்வைக் கால மாற்றங்களைக் காட்டும் வரைபடங்களில் தற்போதைய மாற்றத்தின் வடிவங்கள் தெரிந்தன.
இது 1982-2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடப்பட்டது.
வட அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 40 முதல் 50 டிகிரி அட்சரேகை வரை அதிக அளவிலான பனிப் போர்வைச் சரிவானது எதிர்பார்க்கப் படுகின்றது.