TNPSC Thervupettagam

பனிப்பாறை உடைப்பால் தூண்டப்பட்ட வெள்ளம்

February 12 , 2021 1257 days 609 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
  • இது பனிப்பாறைச் சரிவிற்குப் பிறகு ஏற்பட்டது.
  • இந்தப் பனிச்சரிவு ஆனது பனிப்பாறை உடைப்பு /பிளவு காரணமாக இருக்கலாம்.
  • சாமோலி மாவட்டத்தின் ரெய்னி என்ற கிராமத்தில் உள்ள ஓர் ஏரியையும் இது உடைத்து உள்ளது.
  • ரெய்னி கிராமமானது நந்தாதேவி உயிர்க் கோளக் காப்பகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
  • பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் இது குறித்து விசாரித்து வருகிறது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
  • இந்த உடைப்பால் தெளலிகங்கா நதி மற்றும் ரிஷி கங்கா நதி ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது.
  • பனிச்சரிவானது ரிஷிகங்கா ஆற்றில் உள்ள ரிஷி கங்கா நீர்மின் நிலையத்தை முழுவதுமாகச் சேதப் படுத்தி விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்