உலக வங்கியானது இமாலயம், காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடர்கள் மீதான கருப்புக் கரிமத்தின் (கருப்பு கார்பன்) தாக்கம் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
உலகளாவிய சராசரி பனிக்கட்டிகளை விட இந்தப் பகுதிகளில் காணப்படும் பனிப் பாறைகள் மிக வேகமாக உருகுவதாக இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு “இமாலயத்தின் பனிப்பாறைகள், பருவநிலை மாற்றம், கருப்புக் கரிமம் மற்றும் பிராந்திய நெகிழ்திறன்” எனத் தலைப்பிடப்ப ட்டுள்ளது.
முக்கியத் தகவல்கள்
மனித நடவடிக்கைகளால் உருவான கருப்புக் கரிமங்களின் படிவுகள் (Black Carbon) ஆனது இமாலயப் பகுதிகளில் பனிப்பாறை மற்றும் பனிக்கட்டிகள் உருகும் வேகத்தை துரிதப் படுத்துகின்றன.
இமாலயம், காரகோரம் மற்றும் இந்துகுஷ் மலைத்தொடர்களில் உள்ள பனிப் பாறைகள் பின்னடையும் வீதமானது மேற்கில் ஆண்டுக்கு 0.3 மீட்டராகவும் கிழக்கில் ஆண்டுக்கு 1.0 மீட்டராகவும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.