TNPSC Thervupettagam

பனிப்பாறை ஏரிகளின் விரிவாக்கம்

April 26 , 2024 212 days 296 0
  • 1984 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான இந்திய இமயமலை ஆற்றுப் படுகைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் படம் பிடித்த இஸ்ரோவின் நீண்ட கால செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆனது பனிப்பாறை ஏரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன.
  • 2016-17 ஆம் ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பிளவிலான 2,431 ஏரிகளுள், 676 பனிப்பாறை ஏரிகள் 1984 ஆம் ஆண்டு முதல் விரிவடைந்துள்ளன.
  • குறிப்பாக, இவற்றில் 130 ஏரிகள் இந்தியாவிற்குள் அமைந்துள்ளன என்ற நிலையில், இவற்றில் 65, 7 மற்றும் 58 ஏரிகள் ஆகியவை முறையே சிந்து, கங்கை மற்றும் பிரம்ம புத்திரா நதிப் படுகைகளில் அமைந்துள்ளன.
  • இந்த ஏரிகளில் சுமார் 601 ஏரிகள் (89%) இரண்டு மடங்குக்கு மேலாக விரிவடைந்து உள்ளன என்பதோடு சுமார் 10 ஏரிகள் 1.5 முதல் 2 மடங்கும், 65 ஏரிகள் 1.5 மடங்கும் விரிவடைந்துள்ளன.
  • 314 ஏரிகள் 4,000 முதல் 5,000 மீ என்ற உயரத்திலும், 296 ஏரிகள் 5,000 மீ உயரத்திற்கு மேலான பகுதிகளிலும் உள்ளதாக உயர அடிப்படையிலான ஒரு பகுப்பாய்வு என்பது வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்