முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதனை ஊக்குவிப்பதற்காக வேண்டி சபாநாயகர் அப்பாவு அவர்கள் ஒரு லட்சம் பனை விதைகளை வழங்கினார்.
பனை மரமானது தமிழகத்தின் மாநில மரமாகும்.
இத்திட்டத்தின் கீழ், 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனை மரக் கன்றுகள் வேளாண் துறையின் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப் படும்.
இவை ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளில் நடப்படும்.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிள்ளிகுளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அரசு வேளாண் கல்லூரியில் பனை மரங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும்.