TNPSC Thervupettagam

பன்னாட்டு சூரிய சக்திக் கூட்டணியின் மூன்றாவது கூட்டம்

October 19 , 2020 1408 days 531 0
  • சமீபத்தில் பன்னாட்டு சூரிய சக்திக் கூட்டணியின் மூன்றாவது கூட்டமானது இணைய வழியில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தில் இந்தியாவும் பிரான்சும் மீண்டும் தலைமையாகவும் இணைத் தலைமையாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டன.
  • இதில் விஸ்வேஸ்வரய்யா விருதானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பானுக்கும், ஐரோப்பா மற்றும் இதர பிற பிராந்தியங்களுள் நெதர்லாந்துக்கும் வழங்கப் பட்டது.
  • பன்னாட்டு சூரிய சக்திக் கூட்டணியின் நான்கு பிராந்தியங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள அதிகபட்ச மிதக்கும் சூரிய சக்தித் திறன் கொண்ட நாடுகளை இது அங்கீகரிக்கிறது.
  • கல்பனா சாவ்லா விருதுகள் சூரிய ஒளி ஆற்றல் துறையில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கின்றன.
  • திவாகர் விருதானது  மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் நாட்டில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்