பன்மாதிரி பண்டகப் பூங்கா (Multi Modal Logistics Park) கோவா மாநிலத்தில் மட்கொன் (Madgaon) என்ற இடத்திற்கு அருகில் உள்ள பள்ளி இரயில் நிலையத்தில் (Balli Station) அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவானது கொங்கன் இரயில்வே வழித்தடத்தில் (Konkan Railway route) அமைந்துள்ளது.
கொங்கன் இரயில்வே மற்றும் இந்திய கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனம் (Container Corporation of India Ltd-CONCOR) ஆகியவற்றிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா தனது பொருளாதார போக்குவரத்துத் தீர்வுகள் (Economic transport solutions) மற்றும் நடப்பு நிலை தொழிற்நுட்ப வசதிகள் (State of the art facilities) ஆகியவற்றின் மூலம் கோவாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக்கு நன்மையை பயக்கும்.