ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்மாநிலத்தில் பன்றி வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பன்றி வளர்ப்பு கொள்கை’யை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்தக் கொள்கையில் பின்வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும்:
பன்றி இறைச்சி பதனிடல் தொழிற்சாலையை நிறுவுதல்,
வளர்ப்பாளர்களின் அதிக இலாபத்திற்காக பன்றி இறைச்சி பொருட்களின் மதிப்பு கூட்டலை ஊக்குவித்தல்,
கூட்டுறவு சார்ந்த சந்தைச் சங்கிலியின் உருவாக்கம், மற்றும்
இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை மிக நன்கு நடைமுறைப் படுத்துதல்.
பன்றி வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி அரசு மானியங்கள், வரி குறைப்புகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும்.
'விலங்கு உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான தகவல் வலையமைப்பில் (INAPH)' பதிவு செய்து, மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இலக்க UID கொண்ட காதில் பொருத்தப்படும் குறியீடுகளைப் பயன்படுத்தி விலங்குகளை அடையாளம் காணும் முறையான ஒரு செயல்முறையை மிக நன்கு பின்பற்றவும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.