சந்தேகிக்கப்படும் பபோனிக் கொள்ளை நோய்ப் பாதிப்பானது சீனாவின் பயனூரில் (Bayannur) கண்டறியப் பட்டுள்ளது.
பபோனிக் கொள்ளை நோய் அல்லது கறுப்பு மரணம் ஆனது ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் மிக மோசமான நோய்த் தொற்றுகளில் ஒன்றாக விளங்குகின்றது. இது 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறைந்தது பாதிக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது.
இது எர்சினியா பெஸ்டிஸ் எனப்படும் பாக்டீரியாவின் மூலம் பரவும் ஒரு மிக அரிய ஆனால் மிகவும் கொடிய ஒரு பாக்டீரியா நோய்த் தொற்றாகும்.
இது பாக்டீரிய நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவருடன் ஏற்படும் தொடர்பின் மூலமாகப் பரவுகின்றது.