TNPSC Thervupettagam
September 12 , 2019 1903 days 969 0
  • சமீபத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் “பம்பாய் இரத்த வகையின்” தேவையானது தற்செயலாக அதிகரித்துள்ளது.  ஆனால் அதன் விநியோகமானது குறைந்துள்ளது.
  • அரிய பம்பாய் இரத்த வகையானது 1952 ஆம் ஆண்டில் பம்பாயில் டாக்டர் ஒய் எம் பெண்டே என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேலும் இது “hh” இரத்த வகை என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இது ஆன்டிஜென் (நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி) Hஐ வெளிப்படுத்துவதில் குறைபாடுடையதாக உள்ளது. அதாவது இதன் RBC ஆனது ஆன்டிஜென் Hஐக் கொண்டிருக்கவில்லை.

  • இந்த இரத்த வகையைக் கொண்ட நபர்கள் பம்பாய் HH தோற்ற வகைமை அல்லது பினோடைப்பைக் கொண்ட தனிநபர்களிடமிருந்து தன்னியக்க இரத்தம் அல்லது அவர்களின் இரத்தத்துடன் மட்டுமே அதனை மாற்ற முடியும். இந்த இரத்த வகை மிகவும் அரிதானது ஆகும்.
  • இந்த இரத்தமானது 40,00,000 லட்சம் நபர்களில் 1 நபருக்கு மட்டுமே இருப்பதால் இது மிகவும் அரிதானதாக விளங்குகின்றது.
பாம்பே இரத்த வகை ஏன் தனித்துவமானது?
  • அனைத்து இரத்த வகைகளும் (O, A, B, AB) இரத்தத்தில் ஆன்டிஜென் hஐக் கொண்டுள்ளன.
  • ஆனால் மிகச் சில நபர்கள்  ஆன்டிஜென் hஐக் கொண்டிருக்கவில்லை.
  • அதற்குப் பதிலாக அவர்களிடம் “நோய் எதிர்ப் பொருள்h உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு வேறு எந்த இரத்தமும் கொடுக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்