பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து உயிரி-எரிபொருள்
August 11 , 2019 1935 days 670 0
உலக உயிரி-எரிபொருள் தினக் கொண்டாட்டத்தின்போது (ஆகஸ்ட் 10), மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து (UCO - Used Cooking Oil) தயாரிக்கப்பட்ட உயிரி-டீசலை (பயோடீசல்) வாங்குவதற்காக தேசிய எண்ணெய் சந்தையிடல் நிறுவனங்களினால் (IOC, HPCL and BPCL) தயாரிக்கப்பட்ட “ஆர்வத்திற்கான வெளிப்பாடு” என்ற ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
UCO-யின் சேகரிப்பை மேற்கொள்ளுவதற்காக மறுபயன்பாடு கொண்ட பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீதான ஒட்டுப்படம் (ஸ்டிக்கர்) ஒன்றும் கைபேசிச் செயலி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நாடு முழுவதும் 100 நகரங்களில் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு 50 லிட்டருக்கும் மேல் எண்ணெயைப் பயன்படுத்தும் உணவு வணிக நிறுவனங்கள் மூன்று முறைக்கு மேல் அந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் (Food Safety and Standards Authority of India’s - FSSAI) சமீபத்தில் அந்நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.