சமீபத்தில், மத்தியப் பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு ஆணையமானது (CIBRC - Central Insecticides Board and Registration Committee) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளான ஸ்ட்ரெப்டோமைசின் மற்றும் டெட்ராசைக்கிளினின் போன்ற மருந்துகளின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்ட்ரெப்டோமைசின் ஆனது முன்னதாக காசநோய் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான ஒரு முக்கியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
மேலும் இது பலமருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகளுக்கும் மெனின்ஜிட்டிஸ் காசநோய் (மூளைக் காசநோய்) போன்ற சில வகை நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.
ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஆட்படும் போது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் அது நோய் எதிர்ப்புத் தடைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
CIBRC ஆனது பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக 1970 ஆம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் ஏற்படுத்தப் பட்டது.