TNPSC Thervupettagam

'பயிர்க் காப்பீட்டை' அதிகரிப்பதற்கான புதிய முன்னெடுப்புகள்

March 6 , 2024 267 days 294 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது, பயிர்க் காப்பீட்டை அதிகரிப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த விவசாயச் சமூகத்துக்கு உதவுவதற்காகவும் பின்வரும் மூன்று புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
    • கிசான் ரக்சக் உதவி எண் 14447 மற்றும் இணைய தளம்,
    • வேளாண் காப்பீட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சோதனைக் கட்டமைப்பு சார்ந்த SARTHI தளம் மற்றும்
    • கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) தளம்
  • KRPH 14447 தளமானது வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் இழப்பீடு வழங்கீட்டில் தாமதங்கள் மற்றும் காப்பீடு சார்ந்த வினவல்கள் தொடர்பான குறைகளுக்கான நிகழ்நேரத் தீர்வு ஆகியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் மிகவும் பன்மொழி சார்ந்த தகவல் தொடர்பு வசதியினை வழங்குகிறது.
  • SARTHI தளம் ஆனது விவசாயிகளுக்கும் கிராமப்புற இந்தியாவிற்குமென மிகவும் வெளிப்படையான வகையில் வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்தின் மானியம் கொண்ட PMFBY திட்டம் உள்ளிட்ட காப்பீட்டுத் தயாரிப்புகளின் விரிவான தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SARTHI என்பது வேளாண்மை மற்றும் கிராமப்புற பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காப்பீட்டுக்கான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒரு சோதனைக் கட்டமைப்பினைக் குறிக்கிறது.
  • 2016 ஆம் ஆடனில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்பது அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்