பயிற்சித் துறை விளம்பரங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்
November 19 , 2024 6 days 37 0
பயிற்சி நிறுவனங்களின் தவறான கோரல்களைக் கொண்டுள்ள விளம்பரங்களைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசானது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் ஆனவை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தினால் (CCPA) உருவாக்கப் பட்டுள்ளன.
இது 'பயிற்சித் துறையில் தவறான கோரல்களைக் கொண்டுள்ள ஒரு விளம்பரத்தைத் தடுத்தல்' என்ற தலைப்பில் உள்ளது.
கல்வி சார்ந்த ஆதரவு, கல்வி மற்றும் வழிகாட்டல் சேவைகள் தொடர்பான அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் அவை பொருந்தும் ஆனால் ஆலோசனை சேவை, விளையாட்டு மற்றும் கலை போன்ற துறைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இது குறிப்பாக "100 சதவீத தேர்ச்சி " அல்லது "100 சதவீத வேலைவாய்ப்புப் பாதுகாப்பு" போன்ற தவறான வாக்குறுதிகளை தடை செய்கிறது.
இந்த விதிகளின் கீழ், பயிற்சி மையங்களுக்கு எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்கள், புகைப்படங்கள் அல்லது சான்றுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்த எழுத்துப்பூர்வ ஒப்புதல் ஆனது பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின் பெறப்பட வேண்டும்.