பாட்மிண்டன் பயிற்சியாளர் மற்றும் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியனான (All England Champion) கோபி சந்த் இந்தியாவின் மிகப்பெரிய, உடற்கல்வி பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய திட்டத்தை (Train the Trainers) தொடங்கியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் குஜராத்தில் உள்ள 1500 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி தொடர்பான நவீன பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்களின் திறன்களை வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
அதன் மூலம் அவர்களால் விளையாட்டில் உயரவேண்டுமென ஆர்வம் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு சரியான விளையாட்டு தொழில்நுட்பத்தை வழங்க இயலும்.
இது ELMS ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனின் இலாப நோக்கமற்ற திட்டமாகும்.
இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான அபினவ் பிந்த்ராவும், கோபிசந்த்தும் இத்திட்டத்திற்கான அறிவுரையாளர் (Mentor) மற்றும் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.