TNPSC Thervupettagam

பயோஃபேக் (BIOFACH) இந்தியா

October 29 , 2018 2090 days 666 0
  • இந்தியாவின் இயற்கை விவசாயத் துறையின் மிகப்பெரிய கண்காட்சியான 3 நாள் BIOFACH -இன் 10 வது பதிப்பை மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • இவ்விழாவானது,
    • நியூரன்பர்க் மெஸ்ஸி இந்தியா மற்றும்
    • வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority)

ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபையால் ஆதரவளிக்கப்பட்டது.

  • இவ்வருட BIOFACH India மாநாட்டின்  கருத்துரு : “இந்தியாவில் இருந்து இயற்கை விவசாயப் பொருட்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்வதற்கான உத்திகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவது” என்பதாகும்.
  • உலக அளவில் இந்தியாவானது இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையில் முதலிடத்திலும், இயற்கை விவசாய நிலப்பரப்பு அடிப்படையில் 9-வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்