TNPSC Thervupettagam

பயோமாஸ் வர்த்தக இணையவாயில்

December 12 , 2017 2570 days 901 0
  • இந்தியா தனது முதல் கழிவு மேலாண்மை, மாசு பரிமாற்றம் மற்றும் வர்த்தக இணையவாயிலை தொடங்க உள்ளது.
  • மாசு கழிவுகள் பரிமாற்ற தொழிற்நுட்பத்தை வழங்கும் இலண்டனைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தோடு C Ganga எனும் இந்தியாவின் கங்கை நதிப்படுகை மேலாண்மை மற்றும் ஆய்வு மையம் (Centre for Ganga River Basin Management and Studies) இணைந்து இந்த இணையவாயிலை தொடங்க உள்ளது.
  • இது தூய்மை கங்கா திட்டத்தின் ஓர் பகுதியாகும். இதன் கீழ் கங்கை நதிப் படுகைகளில் உள்ள மாசுபாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மை போன்றவற்றோடு தொடர்புடைய பிரச்சனைகள் களையப்படும்.

C Ganga

  • தேசிய கங்கை தூய்மைத் திட்ட அமைப்பின் (NMCG – National Mission for clean Ganga) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஓர் புதிய ஆலோசனை நல்கு (Think Tank) அமைப்பே C Ganga ஆகும்.
  • நதி மற்றும் தண்ணீர்சார் அறிவியல் களங்களில் இந்தியாவை உலகின் முன்னணித் தலைவராக்குவதே இந்த ஆலோசனை நல்கு அமைப்பின் நோக்கமாகும்.
  • நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதிப்படுத்தும் இம்மையத்தின் தலைமையகம் கான்பூர் IIT-ல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்