இந்தியா தனது முதல் கழிவு மேலாண்மை, மாசு பரிமாற்றம் மற்றும் வர்த்தக இணையவாயிலை தொடங்க உள்ளது.
மாசு கழிவுகள் பரிமாற்ற தொழிற்நுட்பத்தை வழங்கும் இலண்டனைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தோடு C Ganga எனும் இந்தியாவின் கங்கை நதிப்படுகை மேலாண்மை மற்றும் ஆய்வு மையம் (Centre for Ganga River Basin Management and Studies) இணைந்து இந்த இணையவாயிலை தொடங்க உள்ளது.
இது தூய்மை கங்கா திட்டத்தின் ஓர் பகுதியாகும். இதன் கீழ் கங்கை நதிப் படுகைகளில் உள்ள மாசுபாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மை போன்றவற்றோடு தொடர்புடைய பிரச்சனைகள் களையப்படும்.
C Ganga
தேசிய கங்கை தூய்மைத் திட்ட அமைப்பின் (NMCG – National Mission for clean Ganga) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஓர் புதிய ஆலோசனை நல்கு (Think Tank) அமைப்பே C Ganga ஆகும்.
நதி மற்றும் தண்ணீர்சார் அறிவியல் களங்களில் இந்தியாவை உலகின் முன்னணித் தலைவராக்குவதே இந்த ஆலோசனை நல்கு அமைப்பின் நோக்கமாகும்.
நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதிப்படுத்தும் இம்மையத்தின் தலைமையகம் கான்பூர் IIT-ல் உள்ளது.