TNPSC Thervupettagam
November 2 , 2022 757 days 491 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பரம்-காமரூபா எனப்படும் இந்தியாவின் சமீபத்திய மீத்திறன் கணினியினை அறிமுகப்படுத்தினார்.
  • இது அசாமின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இராச்சியமான காமரூபாவின் பெயரிடப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கணினித் தொகுதி ஆகும்.
  • இந்த மீத்திறன் கணினி மையமானது, வடகிழக்குப் பிராந்தியத்தின் வேகமான மற்றும் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினியான பரம்-இஷானை விஞ்சியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் கௌஹாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பரம்-இஷான் தொடங்கப்பட்டது.
  • தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் (என்எஸ்எம்) கீழ் கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பரம்-காம்ரூபா அமைக்கப்பட்டது.
  • தேசிய மீத்திறன் கணினி திட்டம் என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • நாடு முழுவதும் இதுபோன்ற 15 மீத்திறன் கணினிகள் நிறுவப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்