- மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையமானது (C-DAC - Centre for Development of Advanced Computing) இந்தியாவின் மிகப்பெரிய உயர்-செயல்பாடு கொண்ட கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினியைச் (HPC-AI - High-Performance Computing and Artificial Intelligence) செயல்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளது.
- இது “பரம் சித்தி - AI” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 210 AI பெட்டாப்ளாப்ஸ் வேகம் கொண்டது.
- இது உலகளாவிய AI மீத்திறன் கணினி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் முன்னிலை நாடுகளில் இந்தியாவையும் இணைக்கும்.
இந்தியாவில் உள்ள இதர மீத்திறன் கணினிகள்
- முதலாவது மீத்திறன் கணினியானது “பரம் சிவே” ஆகும். இது C-DAC அமைப்பினால் தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
- பிரத்தியூஷ் – இது உலகில் 39வது இடத்தைப் பிடித்துள்ளது. இது புனேவின் இந்திய வானிலைக் கல்வி மையத்தில் உள்ளது.
- மிகிர் என்பது உலகில் 66வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய நடுத்தர வரம்பு கொண்ட வானிலை முன்னறிவிப்பு மையத்தில் அமைந்துள்ளது.
- InC1 ஆனது 206வது இடத்தைப் பிடித்துள்ளது.
- 327வது இடத்தில் உள்ள மீத்திறன் கணினி கல்வி ஆராய்ச்சி மையமானது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ளது.
- iDataplex ஆனது 496வது இடத்தைப் பிடித்துள்ளது.