பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பகத்தில் விலங்கினக் கணக்கெடுப்பு
February 21 , 2025 10 hrs 0 min 38 0
பாலக்காட்டில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பகத்தில் வனத்துறை நடத்திய விலங்கின கணக்கெடுப்பு ஆனது, அப்பாதுகாக்கப்பட்டப் பகுதியின் விலங்கினச் சரி பார்ப்புப் பட்டியலில் 15 புதிய இனங்களைச் சேர்த்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 206 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புதிய சேர்க்கைகளுடன் சேர்த்து, இந்த வளங்காப்பகத்தில் உள்ள மொத்தப் பறவை இனங்களின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஐந்து புதிய வண்ணத்துப்பூச்சி இனங்களும் வளங்காப்பகத்தின் சரி பார்ப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இனங்களின் சேர்க்கையின் மூலம் இவ்வளங்காப்பகத்தில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தக் கணக்கெடுப்பில் மூன்று புதிய இனங்கள் உட்பட சுமார் 39 வகையான தட்டான் இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை இந்த வளங்காப்பகத்தின் சரி பார்ப்புப் பட்டியலில் தட்டான் இனங்களின் எண்ணிக்கையினை 69 ஆக அதிகரிக்கின்றன.