TNPSC Thervupettagam

பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு மீதான ஒப்பந்தம்

November 8 , 2019 1751 days 589 0
  • இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மீதான இந்தியா - ரஷ்யா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான ஆணையத்தின் 19வது சந்திப்பானது ரஷ்யாவில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டமானது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கால் தலைமை தாங்கப்பட்டது.
  • இந்தியாவும் ரஷ்யாவும் முக்கியப் பாதுகாப்பு தளவாடங்களின் விற்பனைக்குப் பின்பான ஆதரவிற்காக குறிப்பிட்ட பணிக் குழுக்களை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன. 2021-2030 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை இந்த இரு நாடுகளும் தீவிரப் படுத்தியுள்ளன.
  • இந்தத் தளவாட ஒப்பந்தமானது இந்தியக் கடற்படைக்குப் பயனளிக்கும். இந்தியப் போர்க் கப்பல்கள் எரிபொருளை நிரப்புவதற்கும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இரு நாடுகளின் துறைமுகங்கள் மற்றும் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றை அணுக முடியும்.
  • மறுமுனையில், மும்பை, விசாகபட்டினம் போன்ற துறைமுகங்களை ரஷ்யா பயன்படுத்தலாம். மேலும் துறைமுகங்கள் தவிர, இந்தியாவில் உள்ள விமான தளங்களையும் ரஷ்யா அணுக முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்