ஊழலை திறனான முறையில் நீக்குவதாக உறுதியளித்த ஆளும் கொலரடோ கட்சியின் முன்னாள் பழமைவாத செனட் அவை உறுப்பினரான அப்டோ பெனிடெஸ் பராகுவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
நடப்பில் செயல்பாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டம் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது ஆகும். இதன்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஊழலை கண்காணித்து வரும் அமைப்பான டிரான்ஸ்பரென்ஸி இண்டர்நேஷனலின் ஊழல் உணர்வுக் குறியீட்டில் (Corruption Perception Index) கடந்த ஆண்டு பராகுவே 135-வது இடத்தைப் பிடித்துள்ளது. இக்குறியீடு 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டது.