TNPSC Thervupettagam

பராக் 8 ஏவுகணை

August 21 , 2018 2293 days 730 0
  • இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த பல்நோக்கு பராக் 8 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதாக இஸ்ரேலிய கடற்படை அறிவித்துள்ளது.
  • இது இஸ்ரேலிய கடற்படையின் சார்-6 ரக வழித்துணைக் கப்பல்களின் செயல்திறனை விரிவாக்குவதற்காக பயன்படுத்தப்படும்.
  • ஒரு நீண்ட தூர இலக்குடைய நிலத்திலிருந்து வானுக்கு பாயும் (LR-SAM) அல்லது நடுத்தர தூர இலக்குடைய நிலத்திலிருந்து வானுக்கு பாயும் (MR-SAM) ஏவுகணையான பராக்-8 (எபிரேய மொழியில் மின்னல் -8) வானில் செயல்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இது அதிகபட்சமாக 2 மாக் வேகம் வரையிலும் அதிகபட்ச தூரமாக 70 கி.மீ. வரையிலும் பாயும் (100 கி.மீ வரை அதிகப்படுத்த முடியும்).
  • இந்த ஏவுகணையானது வான் வழி, கடல் அல்லது நிலத்திலிருந்து வரும் விரிவான கடற்பகுதி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பரவலான மற்றும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்