சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி ஆனது, பராக்கிரம் திவாஸ் அல்லது வீரர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று ஒரிசா மாநிலத்தின் கட்டாக் எனுமிடத்தில் பிறந்தார்.
இந்தியச் சுதந்திரத்தினை மீட்டெடுப்பதில் போஸ் அவர்கள் மேற்கொண்ட பல்பெரும் முயற்சிகளுக்குக் கௌரவமளிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் இந்த நாளை அறிவித்தது.
1920 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்று, நான்காவது இடத்தை அவர் பிடித்தார்.
போஸ் 1938 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் இளம் வயது தலைவரானார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்காக 1943 ஆம் ஆண்டில் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை (INA) நிறுவினார்.
"ஜெய் ஹிந்த்" என்ற சொற்றொடர் ஆனது தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திரத்திற்கான ஒரு முழக்கமாக போஸ் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது.
1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் (ஆசாத் ஹிந்த் அரசு) நிறுவப்படுவதாக போஸ் அறிவித்தார்.
வன்முறையற்ற வழி முறைகள் மூலம் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்காக போஸ் அவர்கள் 1937 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டார்.