TNPSC Thervupettagam

பராக்கிரம் திவாஸ் – ஜனவரி 23

January 25 , 2022 945 days 428 0
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியினை பராக்கிரம் திவாஸ் என்ற தினமாக கொண்டாடுவதற்கு இந்திய அரசு முடிவு செய்து உள்ளது.
  • இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் 125வது பிறந்த நாளாகும்.
  • நேதாஜி அவர்கள் ஒடிசாவிலுள்ள கட்டாக் என்னுமிடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று பிறந்தார்.
  • இவர் 1921 ஆம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • இவர் “சுயராஜ்ஜியம்” (சுவராஜ்) எனும் பத்திரிக்கையைத் தொடங்கினார்.
  • இவர் “The Indian Struggle” எனும் ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • “ஜெய்ஹிந்த்” எனும் முழக்கத்தினை நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களே முதலில் முழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்