TNPSC Thervupettagam

பராக்ரம் திவாஸ் - ஜனவரி 23

January 25 , 2024 306 days 195 0
  • இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த நாளானது, 'பராக்ரம் திவாஸ்' அல்லது தைரிய (துணிவு) நாளாகக் கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டு ஆனது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 127வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார்.
  • 1921 ஆம் ஆண்டு தான் இந்தியக் குடிமைப் பணியில் இருந்து பதவி விலகி இந்தியா திரும்பினார்.
  • 1922 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயராஜ்ஜியக் கட்சியை உருவாக்கினார்.
  • 1923 ஆம் ஆண்டில், நேதாஜி அகில இந்திய இளையோர் காங்கிரஸ் குழுவின் தலைவராகவும், வங்காள மாநில காங்கிரஸ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1942 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் தென்கிழக்கு ஆசியாவில் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.
  • நேதாஜி அவர்கள், 1943 ஆம் ஆண்டில் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் சுதந்திர இந்தியா அல்லது ஆசாத் ஹிந்த் என்ற தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்