நாயகா சமூகத்தவர் (Nayaka) என்ற பொருளில் பரிவாரா (Parivara) மற்றும் தலாவாரா (Talawara) சமூகத்தை கர்நாடகா மாநிலத்தின் அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலில் (list of Scheduled Tribes-STs) சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்தகு சேர்ப்பின் மூலம் இந்த சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் கர்நாடகா அரசிடமிருந்து அட்டவணைப் பழங்குடியினர் என்ற சான்றிதழைப் (Scheduled Tribes certificate) பெறத் தகுதியுடையவர்களாவார். மேலும் மாநிலத்தில் அட்டவணைப் பழங்குடியினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களிலும் பயன்பெற தகுதியுடையவர்களாவர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 342 ன் (Article 342) கீழ் பட்டியல் பழங்குடியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அட்டவணைப் பழங்குடியினருக்கானப் பட்டியலில் எத்தகு தொடர்ச்சியான சேர்ப்பும், நீக்கமும், பிற திருத்தங்களும் சட்டத் திருத்த மசோதா மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையானது நீண்ட காலமாக கர்நாடகா மாநிலத்தில் அட்டவணைப் பழங்குடியினர் அந்தஸ்தை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து வரும் பரிவாரா மற்றும் தலாவாரா சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும்.