'பரிவார் விகாஸ்' திட்டத்தின் கீழ் புதிய இலவச கருத்தடை மருந்துகள்
October 31 , 2017 2619 days 1082 0
பொதுமக்களின் குடும்பக் கட்டுப்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வசதியாக, அந்தாரா, சய்யா என்ற இரு இலவச கருத்தடை மருந்துகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் அந்தாரா மருந்து ஊசி மூலம் உட்செலுத்தக் கூடியதும், சய்யா மருந்து மாத்திரை வடிவில் உட்கொள்ளக் கூடியதும் ஆகும்.
மத்திய அரசின் 'பரிவார் விகாஸ்' திட்டத்தின்கீழ் இந்த மருந்துகள் முக்கியத்துவம் வாய்ந்த 146 மாவட்டங்களில், நாட்டின் 44 சதவீத மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம்மருந்தானது, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, மேற்கு வங்கம், ஒடிஸா, தில்லி, கோவா ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கருவுறுதலை தள்ளிப் போடவும், தடுக்கவும் பெண்களுக்கு உதவும் வகையில் இந்த இரு மருந்துகளும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் கருவுறுதல் விகித்தை 1-ஆகக் குறைப்பதே 'பரிவார் விகாஸ்' திட்டத்தின் நோக்கமாகும் .