தொழிலகங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக மற்றும் விரைவாக வழங்குவதற்காக வலைதள அடிப்படையிலான ஒற்றைச் சாளர அமைப்பான பரிவேஷ் என்ற வசதி அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 15 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.
ஊடாடும், நல்ல மற்றும் சுற்றுச்சூழல் ஒற்றைச் சாளர மையம் மூலமாக செயல்திறன் மற்றும் பொறுப்பான வசதி என்பது பரிவேஷ் என்ற சொல்லின் விளக்கமாகும் (Parivesh - Pro-Active and Responsive facilitation by Interactive, Virtuous and Environmental Single-window Hub).
இந்த அமைப்பானது, தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு ஆணையங்களிடமிருந்து சுற்றுச்சூழல், வனங்கள், வன உயிரிகள் மற்றும் கடலோர ஒழுங்காற்றுப் பகுதி ஆகியவற்றின் ஒப்புதலுக்காக ஏற்படுத்தப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல், ஒப்புதல் பெறுதல், முன்மொழிதல் ஆகியவற்றினைக் கண்காணிப்பதற்கான ஒரு தானியங்கி அமைப்பாகும்.